TNPSC Thervupettagam

‘பக் ஷிராஜா’வுக்கு ஒரு சமர்ப்பணம்!

January 24 , 2025 6 hrs 0 min 12 0

‘பக்ஷிராஜா’வுக்கு  ஒரு சமர்ப்பணம்!

  • இப்போதும் பராமரிக்கப்பட்டு வரும் பக்ஷிராஜா ஸ்டுடியோவின் இலச்சினையான கழுகுச் சிலை பேசும்படக் காலத்தின் முதல் 50 ஆண்டுகளில் கொங்கு மண்டலமும் தன்னுடைய பாரிய பங்கைத் தமிழ் சினிமாவுக்கு அளித்திருக்கிறது. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் பக்ஷிராஜா ஸ்டுடியோவும் புகழ்பெற்று விளங்கின. அங்கே தயாரான படங்களின் வழியாக, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகமான பல நடிகர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் பின்னாளில் பெரும் ஜாம்பவான் களாக வலம் வந்தார்கள்.
  • அவர்களில் பலர் அரசியலிலும் நட்சத்திர மானார்கள். கோடம்பாக்கத்து ஸ்டுடியோக்கள் குறித்துப் பேசும் அளவுக்குக் கொங்கு மண்டல ஸ்டுடியோக்கள் பற்றிய பதிவுகள் குறைவாக இருக்கின்றன. அந்தக் குறையை ‘பக்ஷிராஜா பறவை’ என்கிற ஆவணத் திரைப்படம் வழியாகப் போக்க முயன்றிருக்கிறார் மூத்த திரையாளுமையும் கவிஞரும் எழுத்தாளருமான சூலூர் கலைப்பித்தன். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் புலவர் பட்டம் பெற்ற இவர், 35க்கும் அதிகமான நூல்களின் ஆசிரியராகத் தடம் பதித்தவர்.

கலைப்பித்தன்

  • ‘கலைப் பித்தன்’ என்கிற இலக்கிய இதழை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்ததால், இதழின் பெயரே அவரது பெயராகவும் ஆனது. வானொலி நாடகங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், படத் தயாரிப்பு, எழுத்து, இயக்கம் என்று புகழ்பெற்றார். திரைக்கதை திலகம் கே.பாக்யராஜின் படங்களில் பணியாற்றிய அனுபவத்துடன், பாக்யராஜின் கதை, வசனத்தில் ‘சாட்டையில்லாத பம்பரம்’, ‘கண்ணைத் தொறக்கணும் சாமி’ ஆகிய 100 நாள் படங்களைத் தயாரித்தவர்.
  • இவரது எழுத்து, இயக்கத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, ‘பசும்பொன் தெய்வம்’ என்கிற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியானது. இப்போது வரை திரையுலகில் உற்சாகம் குறையாமல் இயங்கிவரும் இவர், தன்னுடைய பரந்துபட்ட திரையுலக அனுபவங்களையும் தொடர்புகளையும் கொண்டு, தமிழ் சினிமாவுக்குப் பங்களித்த கொங்கு மண்டலத்துக்குச் சிறப்புச் செய்யும் விதமான ‘பக்ஷிராஜா பறவை’ ஆவணத் திரைப்படத்தை (Docudrama) உருவாக்கியுள்ளார்.
  • 2 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இப்படம், ‘சினிமா லயா’ என்கிற திரைப் படப் பயிற்சிப் பட்ட றைக்கு வரும் ஆர்வ லர்களுக்கு சினிமா வரலாற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியரின் உரையுடன் தொடங்குகிறது. கோவையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்செண்ட் என்கிற ரயில்வே தொழிலாளி சலனப் படங்களைப் பட்டிதொட்டி யெங்கும் எடுத்துச் சென்றது, பிறகு ‘டிலைட்’ என்கிற நிரந்தரத் திரையரங்கை உருவாக்கியது தொடங்கி, கோவைக்கும் தமிழ் சினிமாவுக்கு மான தொடக்கக் கால உறவு பற்றி விவரிக்கிறார்.
  • “தியாகராஜ பாகவதர், பியு.சின்னப்பா, மு.கருணாநிதி, கண்ணதாசன், எம்.எஸ். சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வி. எனப்பல பிரபலங்கள் தங்கள் திரைப் பயணத்தைத் தொடங்கிய இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. அதில் வேலை செய்து படத் தயாரிப்பு அனுபவம் பெற்றவர் ஸ்ரீராமுலு நாயுடு. அவர், பின்னாளில் தொடங்கியதுதான் பக்ஷிராஜா ஸ்டுடியோ. அங்கேதான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த மலைக்கள்ளன் படத்தை ஸ்ரீராமுலு தயாரித்தார். அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. அந்தப் படம் ஜனாதிபதி விருதைப் பெற்றது” என்று பக்ஷிராஜா ஸ்டுடியோவின் வரலாற்றை விவரித்தபடி இப்போது பக்ஷிராஜா டவர்ஸ் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கும் ஸ்டுடியோ வளாகத்துக்குத் திரைப்படம் நம்மை அழைத்துச் செல்கிறது.
  • பக்ஷிராஜா ஸ்டுடியோவின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு நாயுடுவின் மூத்த மகனும் கோவையின் முதல் நரம்பியல் சிறப்பு மருத்துவரு மான டாக்டர் ஸ்ரீஹரி தனது அப்பாவின் நாள்களைப் பகிர்ந்து கொள்ளும் அவருடைய விரிவான நேர்காணல், இந்த ஆவணத் திரைப்படத்தை ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மாற்றி விடுகிறது. பக்ஷிராஜா ஸ்டுடியோவின் வரலாற்றுடன் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகி யோரின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருப்பதை ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கு’ வழியாக விரித்துச் சொல் கிறது.
  • ‘மலைக்கள்ளன்’ நாவலை எழுதிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வெற்றிக்கதையையும் கூடுதலாக இணைத்துக்கொண்டிருக்கும் இப்படம், தமிழ் சினிமா வரலாற்றுத் தரவுகளுக்கு வலிமை சேர்க்கும் பொக்கிஷம். பக்ஷிராஜா ஸ்டுடியோ வரலாற்றின் வழியாகப் பல பெரிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பல அறியாத பக்கங்களைத் துலங்கச் செய்திருக்கும் இப்படம், தற்போது தணிக்கைக் குழுவின் பார்வைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories